அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனை நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைமுருகன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (வயது 87). திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீரென காதில் வலி ஏற்பட்ட வலி காரணமாக அவர் சென்னையில் உள்ள காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்நோக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதற்கிடையே அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார். சமீபத்தில் தான் தமிழக அரசால் அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]()
