
தொடங்கவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வந்து சேருமாறும், தேவையற்ற பொருட்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர பரீட்சார்த்திகளிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விதிமுறைகளை யாராவது மீறினால், அது குற்றமாகக் கருதப்பட்டு, அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் விளைவாக 5 ஆண்டுகள் பரீட்சைத் தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இன்று (16) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவற்றுள் 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 75,968 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.