மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். 8 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-வது துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இன்று 10 மணி அளவில் இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிய விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் சரத்பவார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் அஜித் பவாருடன் சென்ற 6 பேரும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. பாராமதி விமான ஓடுதளம் என்பது மிகச்சிறியது. அதில் தரையிறங்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாயிருக்கிறது. மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடைபெற்றுள்ளது.

விமானமானது முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருப்பதை பார்க்க முடிகிறது. அஜித்பவார் பயணித்த விமானமானது டெல்லியை தளமாகக் கொண்ட சார்ட்டர் நிறுவனமான VSR-க்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்று தெரியவந்துள்ளது. பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
![]()
