தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும்,
எப்போதும் வராதது – வந்தால்
எளிதாகச் சுகம் அளிக்கும்!-நீ
நினைத்தால் வருவதில்லை
விதிகள் அதற்கு ஏதுமில்லை;
விழித்தால் மறைந்துவிடும்
விந்தையாகத் திரைகாட்டும்
உலா அது சுகம்தரும்
தூக்கத்தில் மட்டும் வரும் கனவு
அது; ஏன் நிஜத்தினில் வருவதில்லை?
பார்க்கின்ற காட்சிகள்
உண்மை போல் இருக்கும்,
பதியில் விழி திறந்தால்
கனவாகிப் போயிருக்கும்
நிலைகண்டு மனம் ஏங்கும் நிலையாச்சே
மாயத்திரையே நீ மறுபடியும் வாராயோ
புரியாத வாழ்வில்
இனம் புரியாத கனவு!
திரையாக ஓடிப் பல
காட்சிகள் ஆகி நிற்க.
அலையாகச் சிந்தனைகள்
அதிசயம் காண்பதும்
ஒரு சுகமானது; அதில்
நிஜமும் நிழலும் மாயத் திரைளான கனவு இது..!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (20.01,2026)
![]()
