டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழக வளாகம் இன்று சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைப் பராமரிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()
