அதிகாரிகள் தங்களின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை தங்களின் சொத்து வருமானம் பற்றிய தகவல்களை வழங்காத அதிகாரிகள் இன்று குறித்த வாய்ப்பை பெறுவார்கள்.
2023-ஆம் ஆண்டின் ஊழல் ஒழிப்புச் சட்டம் எண் 9-இன் விதிகளின்படி, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினத்திலும் அந்த விவரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
![]()
