ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. தாக்குதல் செய்தி வெளியான ஒரே மணிநேரத்தில் பதிவான விலை மாற்றங்கள் வருமாறு:
பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய்: ஒரு பீப்பாயின் விலை 3.63% உயர்வடைந்து 96.75 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
WTI மசகு எண்ணெய்: ஒரு பீப்பாயின் விலை 3.35% அதிகரித்து 93.89 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விநியோகத் தடைகள் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் இந்த உடனடி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
![]()
