இலங்கையைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் அவசர ‘செம்மஞ்சள் நிற’ (Amber Alert) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (05) முற்பகல் 10.30 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான நாட்டைச் சூழவுள்ள அனைத்து கடற்பரப்புகளும் இதற்குள் உள்ளடங்குகின்றன.
குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் (kmph) வரை அதிகரித்து மிக வேகமாக வீசக்கூடும்.
கடல் அலைகளின் உயரமானது சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை உயர்வதற்குக் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
குறித்த கடற்பரப்புகள் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படலாம் என்பதால், கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இக்காலப்பகுதியில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
![]()
