மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ளமையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதியில் உள்ள மின் பாதையே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் சம்பவ இடத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாலிசிறிபுரப் பண்ணைக்கு அருகிலிருந்து ஓமரகொல்ல வரையிலும், ஓமரகொல்லவிலிருந்து மதஹபோல கந்த வரையிலும், ஹெவனதென்னவிலிருந்து கட்டுவலந்த வரையிலும் உள்ள பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
