
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பலரும் அண்மைக்காலமாக இந்துக்கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டு வழிபாட்டில் இணைந்துகொள்வது வழமையாகியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரான ஊடகவியலாளர் பிரகீத் எக்னியகொடவிற்கு நீதி கோரி அவரது மனைவி சந்தியா காளியை தொடர்ந்து வழிபட்டுவருகிறார்.தனது வழிபாட்டினாலேயே கோத்தபாய அடித்து விரட்டப்பட்டதாகவும் தெரிவித்துவருகின்றார்.
இந்நிலையில் உட்கட்சி மோதலால் பாதிக்கப்பட்ட பிரதமர் ஹரிணி கேதீஸ்வரத்தின் சிவராத்திரிக்கு இன்று வருகை தந்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இந்துக்கள் போன்றோ வழிபாட்டில் இணைந்து கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் உணர்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.
![]()
