முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கொலை தொடர்பாக 41 குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவர்களில் 12 பேருக்கு மரணதண்டனையும், மேலும் நான்கு சந்தேக நபர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 23 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 சந்தேக நபர்களில், ஒரு சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
![]()
