வெள்ளி முதல் நாடளாவிய தொடர் வேலைநிறுத்தம் – வைத்தியர்கள் அறிவிப்பு!
வெள்ளிக்கிழமை (23) முதல் நாடளாவிய ரீதியில்தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது
வைத்தியர்களை, சுகாதாரத் துறையைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை கண்டுகொள்ள 2026 பாதீடு முன்மொழிவுகள் தவறியுள்ள நிலையில் மருத்துவ சமூகத்துக்குள் மோசமான திருப்தியின்மைக்கு வழிவகுத்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, சுகாதார அமைச்சருக்கிடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் தொடர்ந்த கலந்துரையாடல்கள் நடைபெறவில்லையென்றும், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் பூர்த்தி செய்யப்படவில்லையென்றும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பயனுள்ள தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம் தொடருமென சங்கம் எச்சரித்துள்ளது.
![]()
