வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் விபத்து
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதியின் பக்கமிருந்த கதவு திறந்திருந்ததால், அதை மூட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஒரு தடுப்பில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ் நடத்துனர், சிறு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மேலும் மூன்று பேர் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து வீதியின் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் பாதுகாப்பு பட்டி (சீட் பெல்ட்) அணியவில்லை என தெரியவந்துள்ளது.
![]()
