விஜய் வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனையடுத்து, கடந்த 2015 – 16 ஆம் ஆண்டுக்கான வருமானமாக ரூ.35,42,91,890 என கணக்கு காட்டியிருந்தார்.

இந்த கணக்கு மற்றும் சோதனையில் நடத்திய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, விஜய் புலி படத்திற்கு வாங்கிய ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்தது.
வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும் ஆனால் காலதாமதமாக 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
உரிய காலத்தில் தான் அபராதம் விதித்துள்ளதாக வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதத்தையம் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த செந்தில் குமார ராமமூர்த்தி, விஜய்யின் வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் , ஜனநாயகன் படக்குழு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தற்போது இந்த வழக்கிலும் விஜய்க்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()
