யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) பெருமையோடு வழங்கிய “கார்காலப் பெருவிழா” கடந்த 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுலோவில் அமைந்துள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
1974ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை படித்து வெளியேறிய அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பழைய மாணவமாணவியரும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் பல கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்திருந்தன.
இந்நிகழ்வின் போது “பல்கலை முழவம்” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக கல்வியியலாளர்கள் , இலக்கியகர்த்தாக்கள், சமூகப் பொறுப்பு வாய்ந்த பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
![]()
