வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு யுனிட் மின்சாரத்தின் சராசரி செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது.
தற்போது செய்யப்படுவது அதிகமாக வாங்கி குறைவாக விற்பதுதான். நாங்கள் நாட்டைக் கைப்பற்றியபோது, கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவு 37 ரூபாயாக இருந்தது. இப்போது அதை குறைக்க முடிந்துள்ளது.
![]()
