இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட புதிய வில விபரங்கள் பின்வருமாறு:
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்: புதிய விலை: ரூ. 292.00
லங்கா ஓட்டோ டீசல்: புதிய விலை: ரூ. 277.00
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவை பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
![]()
