ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற “பொருளாதார கண்காணிப்புக் குழு” கூட்டத்தின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களைக் குறைப்பது குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர்ச் சூழலால் அதிகரித்துள்ள எரிபொருள் விலை, கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆராயப்பட்டது.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் சந்தை நிலவரத்தை சீராக வைத்திருப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டன.
மேலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு, துறைமுக அதிகாரசபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் தலைவர்களும் இதில் பங்கேற்று தமது துறை சார்ந்த நிலைப்பாடுகளை விளக்கினர்.
![]()
