அதிமுகவில் சசிகலா தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் டெல்டா மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெருக்கடியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நகர்வுகள், அதிமுகவின் எதிர்கால அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் கடந்த சில ஆண்டுகளாகவே தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒருபுறம் இயங்கினாலும், ‘சின்னம்மா’ சசிகலாவின் திடீர் அரசியல் சுற்றுப்பயணங்களும், ரகசியத் திட்டங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தனது கோட்டையான டெல்டா மாவட்டங்களில் அவர் மேற்கொண்டு வரும் நகர்வுகள், எடப்பாடிக்கு ஒரு புதிய ‘செக்’ வைத்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
![]()
