January 14, 2026

காதலே! உயிர் மூச்சாகி

கவிஞனாய் எனை ஆக்கி

கவிதைக்குப் பொருளாகி

எழில் புகுந்து நின்ற

என் காதல் தேவியே…

இனிமைத் தமிழுக்கு

இசைவான சொல்லுக்கும்

இவள் என்றும் சரிபாதியே!

காதல் இன்றி உலகம் இல்லை

கன்னியர் கடைக்கண் பார்வையும் இன்றி

காதல் இல்லை

அவள் பார்த்த முதல் பார்வை

அதனாலே அலைமோதி

உருவான காதலால்

ஒன்றானோம்

அன்பென்ற கோட்டையில்

குடியேறினோம்!

பெண் இன்றி ஆண் இல்லை- உலகில்

பேரின்பம் காணாத படைப்பும் இல்லை

அவள் இன்றி நான் இல்லை

நான் இன்றி அவள் இல்லை

அழகான காதல் அது மலராகி நெஞ்சத்தில்

குடிகொள்ளும் நாள் அதுவே

திருநாளாம் ஆகிவிடும்

அதனாலே உயர்வாழ்வு சீர்பெருகும்!

ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (13.01,2026)