
மக்களின் சிறு பங்களிப்புடனும், அமரர் செல்வி அல்லிக்குட்டி சரஸ்வதி அவர்களின் நினைவாகவும், அமரர் அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் பெரும் முயற்சியால் இக்கட்டடம் கட்டப்பட்டு, 21.03.1969 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று (06.03.2026) அமரர் அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது பிள்ளைகள் இணைந்து கலைவாணி சனசமூக நிலையத்தை முழுமையாகப் புனரமைப்பு செய்து சீரமைத்துள்ளனர்.
தமது தந்தையார் சமூகத்திற்காக ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பிள்ளைகளின் இந்தச் செயல், அவர்கள் தந்தைக்குச் செய்யும் உன்னதமான காணிக்கையாக அமைகிறது. ஊரின் நலனுக்காகவும் சிறப்புக்காகவும் உழைத்த ஒரு மாமனிதர், மறைந்த பின்னரும் தனது பிள்ளைகள் ஊடாக அச்சேவையைத் தொடரச் செய்துள்ளார் என்பது பெருமைக்குரியது.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறுப்பிட்டி முத்துமாரியம்மனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!



நிழல்படங்கள் காணொளி மயூரன்
![]()
