ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிலையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அவரது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதுதான் ரோகித் சர்மாவின் கடைசி போட்டியா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
![]()
