மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் உயர்வு ஆகிய காரணிகளால் எரிபொருள் விலை உயர்வடைந்தது. தற்போது எரிபொருள் விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது. வரிசையும் இல்லை. எதிர்வரும் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளன. ஆகவே எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து பூகோள எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாத காலப்பகுதியில் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருந்த போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை அதிகளவில் கொள்வனவு செய்தார்கள்.அதனால் எரிபொருளுக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பை பாதுகாப்பதற்கும் , எரிபொருள் கறுப்புச் சந்தையை இல்லாதொழிப்பதற்கும் எரிபொருள் விநியோகத்துக்கு கியூ.ஆர் முறைமை அறிமுகப்படுத்தினோம், இரட்டை எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் உயர்வு ஆகிய காரணிகளால் எரிபொருள் விலை உயர்வடைந்தது. தற்போது எரிபொருள் விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது. வரிசையும் இல்லை.
எதிர்வரும் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளன. ஆகவே எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
![]()