சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான உறவு குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2006-ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டீன் இளம் பெண்களுக்கு எதிராகச் செய்யும் குற்றங்கள் பற்றி “எல்லாருக்கும் தெரியும்” என்று டிரம்ப் தன்னிடம் தொலைபேசியில் கூறியதாக முன்னாள் காவல்துறை அதிகாரி மைக் ரைட்டர் (Michael Reiter) எப்.பி.ஐ (FBI) இடம் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் தனது நண்பரான மேக்ஸ்வெல்லுக்கு 2011-ல் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், டிரம்ப் தனது வீட்டில் பல மணிநேரம் செலவழித்ததாகவும், ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் பாயவில்லை (“The dog that didn’t bark”) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இவை அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படும் “பொய் செய்திகள்” (Fake News) என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீனின் மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இந்த புதிய மின்னஞ்சல் கசிவுகள் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எப்.பி.ஐ விசாரணையில் டிரம்ப் தொடர்பான பல ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
![]()
