உணர்வுகள்
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

ஏங்கிய இதயங்களுடன் – அந்நிய
தேசத்தில் வாழ்ந்தாலும்
என் எண்ணம் எல்லாம்
தாயக நினைவாகும்.
எத்தனை காயங்கள்
தாங்கினோம் ஈழத் தேசத்தின் விடிவுக்காய்!
கண்முன்னே ஆயிரம் ஆயிரம் வீரர்கள்
ஆகுதியானார்.
கடமை உணர்வுடன்
எம் மண்ணை காக்க சென்ற,
அடுத்த சந்ததிக்காய் தம்மைத் தந்த
தியாகிகளுக்காய் என்ன செய்தோம்?
சிந்திப்பீர் எம் தேச உறவுகளே!
மண்டியிட்டு வாழ
எம் மறத்தமிழ் இனம்
ஒன்றும் கோழை அல்ல;
மாண்டு மடிந்தாலும் மீண்டு எழுந்து
புதுச் சரித்திரம் படைக்கும்
பாங்கு உண்டு ஈழத் தமிழனிடம்.
எத்தனை நாடுகள் சென்றாலும் –
அவன் நாடி நரம்பெல்லாம்
நெஞ்சத்து உணர்வுகளைத் தேக்கி வைத்து
நாடி நிற்கும் ஈழ விடிவை நோக்கி !
![]()
