ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் நியதிகள் பின்பற்றப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் நியதிகள் பின்பற்றப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அப்பாலான கடற்பரப்பில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்பட்ட தாக்கங்கள் என்னவென்பது தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சாசனம் பின்பற்றப்படும்
இதில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளினது சங்கங்களின் நீல பொருளாதார சட்டகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மூலோபாய செயற்பாடுகள் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும்.
இலங்கை இந்த விடயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் 2025 ஆம் ஆண்டில் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.
எம்மால் சர்வதேச சட்டங்களை மீண்டும் உறுதிப்படுத்த முடியுமானால், எந்தவொரு சவால்களுக்கு இலங்கையினால் முகங்கொடுக்க முடியும்.
உலகின் பல நாடுகளை போலவே, ஒரு நாடாக இலங்கையும் பல சவால்களுக்கு முகங்கொடுக்கிறது
எனவே, நாம் சர்வதேச சட்டங்களை பலப்படுத்த வேண்டும் என்பதுடன், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
![]()
