இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2025 மார்ச் மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அதற்கமைய, 2026 மார்ச் மாதத்திலான பணவனுப்பல் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட மொத்தப் பணவனுப்பல் 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீத அதிகரிப்பு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()