இந்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தங்க நகைகளுக்கான வரி விலக்கு (Duty-Free Gold) விதிகளை புதுப்பித்துள்ளது. இதுவரை, பயணிகள் கொண்டு வரும் நகைகளுக்கு மதிப்பின் அடிப்படையில் (value cap) சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய அறிவிப்பின் படி, இனி எடையின் அடிப்படையில் (weight-based allowance) வரி இல்லாமல் தங்க நகைகள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், பயணிகளுக்கு தெளிவான மற்றும் எளிதான விதிமுறைகளை வழங்கும்.
குறிப்பாக, ஆண்களுக்கு 20 கிராம் வரை, பெண்களுக்கு 40 கிராம் வரை தங்க நகைகள் வரி விலக்குடன் (Duty-Free) கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச மதிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆண் பயணிகள் ரூ.50,000 வரையிலான மதிப்பு கொண்ட நகைகளுக்கும், பெண் பயணிகள் ரூ.1,00,000 வரையிலான மதிப்பு கொண்ட நகைகளுக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை வழங்கப்பட்டது.
ஆனால், புதிய விதிமுறையால், மதிப்பு எவ்வளவு இருந்தாலும், எடையின் அடிப்படையில் வரை விலக்கு சலுகை கிடைக்கும்.
இந்த மாற்றம் சுங்க அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் குழப்பத்தை குறைக்கும்.
இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பயணிகளுக்கு வரிச் சலுகை மற்றும் வசதி அளிப்பதோடு, சுங்க விதிமுறைகளை எளிமைப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
![]()
