அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார்.
அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம்.
இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
![]()
