ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!
எங்கள் குறை அறிந்து நின்று
காத்து நிற்கும் அழகா!
காவலாய் நின்று எம்மைக்
காக்கும் வேலவா!
வேண்டி உந்தன் அடிதொழவே
அருள்தருவாய் முருகா!
மலைமீது அமர்ந்தவனே – எம்
மனமெல்லாம் புகுந்தவனே!
மலர்முகத்துத் திருமகனே!
மதிமுகத்து ஒளியவனே!
வேலோடு வினைதீர்த்து
காட்சிதந்து நிற்பவனே!
வினைதீர வரம்தந்து
எமையாளும் நாயகனே!
தந்தைக்கு மந்திரத்தை
ஓதிநின்ற அருளாளனே!
தமையனாம் கயமுகனின்
அருமைச்சகோதரனே !
ஐயன் உன்னைத் தொழும் வரம்
வேண்டும் எந்நாளும்!
ஆண்டருள்வாய் ஆசிதந்து
எமைக்காப்பாய் எந்நாளும்!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா 11.01.2026

More Stories
காதலே! உயிர் மூச்சாகி
பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம்
அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவோம்!