புத்தரை சிலையை எம் நிலத்தில் விதைத்துவிட்டு.எம்
பூமியை அபகரித்து நிற்கும்
மனதில் துவேஷம் கொண்ட
பீடாதிபதிகளுக்கு..
புத்தரின் தத்துவம் புரியவில்லையோ?
அஞ்சி அஞ்சி ஜபதினெட்டில் இருந்து – எம்மை
அடிமைகள் ஆக்கி வைத்த புத்தரின் போதிகளே!
பல்லினம் வாழும் நாட்டில்
புத்த சாசனம் அமைத்ததில் இருந்து
புரிந்தது உங்கள் நோக்கம்.
அகதிகளாய் எம்மினம் வாழ
உங்கள் போதனைதான் காரணமும்!
புத்தரின் போதனையை
சற்று உணர்ந்திருந்தால்
புண்ணிய பூமியாக மட்டுமல்ல
பொன்னொளிக்கும் பூமியாய்
இருந்திருக்கும் இலங்கை.
சத்திய வேள்விக்காகச்
சாவுகள் தேவையில்லை
சமரசப் பேச்சுக்காக
உலக நாடுகள் தேவையில்லை.
எத்தனை கொடூரக்
கொலைகளைச் செய்துவிட்டு
புத்தரின் சிலையை வைத்து.எங்கள்
புனித ஈழ மண்ணை அபகரிக்க
தமிழ் இனம் விட்டுவிடுமோ?
விட்டுவிடுவோம் புத்தர் சிலையை மட்டும்
மற்றக் காணிகளை விட்டு
மாற்றானே வெளியேறு!
மறத்தமிழ் மக்கள் என்னும்
கொடுத்து வாழ்பவர்
மாண்பாய் தானே ஈழப்போர் நடத்தினர்!
எங்கு ? பிடித்தார் உங்கள் காணிகளை
எங்கு ?வைத்தார் எங்கள் தெய்வங்களை?
இதை உணர்ந்து …..
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாமல்
அன்பு வழியிலே வாழ
புத்தரின் போதனை தத்துவம் மறவாமல்…
துவேஷம் கொண்ட பீடாதிபதிகளே!
புத்தரின் தத்துவப் பாதையில் சென்றால்
கைதட்டி மக்கள் கவலையைத் தீர்ப்பீர்
காணியை அவர்கள் கைகளில் கொடுப்பீர்கள்.
ஆக்கம் கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

More Stories
காதலே! உயிர் மூச்சாகி
அருள்தருவாய் முருகா!
பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம்