ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக இருப்பது நோன்பு, அந்த வகையில் ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலையில் இருந்து உணவு சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும் விரதம் இருப்பது வழக்கம். மாலை நேரத்தில் தான் நோன்பை முடித்து விட்டு உணவு அருந்துவார்கள். ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான நோன்பானது வருகிற வியாழக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறையை தென்பட்டால் நோன்பை கடைப்பிடிப்பார்கள். அன்றைய தினத்தில் ரமலான் மாதத்தில் பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். இந்நிலையில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
![]()
