விஜய் நடிகை ஒருவருடன் கள்ள உறவில் இருப்பதாக, அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டி விவாகரத்து கோரியிருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து, முதலமைச்சர் குடும்பத்திடம் சங்கீதா உதவி கேட்டதாக திருச்சி சூர்யா கூறியிருக்கிறார். ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு இது குறித்து, திருச்சி சூர்யா பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “விஜய் விஷயம் குறித்து, முதலமைச்சர் குடும்பத்தில் நெருக்கமான நபரிடம் சங்கீதா பேசியிருக்கிறார்.

ஆனால், முதலமைச்சர் இந்த விஷயத்தில் எதையும் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். தேர்தல் வரை, இதில் எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்று கூறியிருக்கிறார். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். குறிப்பாக கரூர் சம்பவத்தில், அவரை பார்க்க வந்து, நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான விஷயத்திலும், அதை விஜய் கண்டும் காணாமலும் சென்ற விஷயத்திலும் விஜய்யின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகியிருந்தது. அதை தொடர்ந்து வருமான வரி விஷயத்திலும், நீதிமன்றத்தால் சிக்கலுக்கு உள்ளானார் விஜய்.
தற்போது அவரது மனைவியே விஜய் குறித்து சரமாரியாக விமர்சித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜய் மனநலம் பாதிக்கபட்டவர் என்றும், அவர் தன்னை தாக்கினார் என்றும், திருமணத்தை மீறிய உறவை கேள்வி எழுப்பியபோது, தன்னை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதாகவும் சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதை கைவிட்டுவிடுவதாக கூறியிருந்தார். ஆனால், தனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றும் கூறியிருந்தார். நடிகையுடன் தொடர்ந்து உறவில் இருந்து வருவதாகவும், நடிகையும் இவருடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார் என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்கையில், விஜய் தொடர்பா, முதலமைச்சரின் குடும்பத்தில் சங்கீதா உதவி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
