யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி, பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு படுத்தியுள்ளனர்.
இதன்போது, பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த எழுச்சி நிகழ்வில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பன பொங்குதமிழ் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()
