உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்காமல் உண்மையான சூத்திரதாரியை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இது இலங்கையையும் பாதித்து வருகின்றது. இது கூடுதலாக விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் என சகல துறைகளையும் இது பாதிக்கச் செய்துள்ளது.
இப்போது விவசாயிகள் தற்போதைய நிலைமையில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் சோர்வடையமால் அவர்களை பாதுக்காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு சாதரண மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த யுத்தம் எவ்வளவு காலத்திற்கு தொடரப் போகின்றது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஏற்படக்கூடிய நெருக்கடியில் இருந்து இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
![]()