
எனக்கு ஆண்ட பரம்பரை என்பதில் எந்த பெருமையும் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. வெறும் மொழி உணர்வு மொழிப்பற்று கிடையாது என்று பேசியுள்ளார்.
சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமண சடங்குகளையும் ஏற்றுக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தை அழித்ததாக திருமாவளவன் பேசியது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாளவளன், எந்த அரசன் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. எவனையும் நான் பெரிய சக்தியாக பார்ப்பது இல்லை. அந்த மன்னர்கள் காலத்தில் தான் நாடு குட்டிச்சுவரானது. சமஸ்கிருதமயமானது. இந்துத்துவ மயமானது. கோவில் கருவறைக்குள் இருந்து தமிழ் தூக்கி எறியப்பட்டது. எல்லாம் பண்டைய சேர, சோழ பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் தான். வேள்வி, யாகம் நடத்தியவன் தமிழ் பெயர்களை வடமொழி பெயர்களை தனது பெயருக்கு பின்னால் சூட்டிக்கொண்டவன்.
ராஜராஜன் என்பது தமிழ் பெயரா, ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வட மொழி பெயரை சூட்டிக்கொண்டவர்கள். வட மொழி மற்றும் வேள்வி, யாகம் அனைத்திலும் மூழ்கி கிடந்தவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட மன்னர்கள் என்றாலும் எம் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு ஆண்ட பரம்பரை என்பதில் எந்த பெருமையும் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. வெறும் மொழி உணர்வு மொழிப்பற்று கிடையாது என்று பேசியுள்ளார்.
திருமாளவளனின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் பேச்சு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது டிடிவி தினகரனும் தனது கண்டனத்தை பதிவு செய்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவன், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்
![]()
