இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷான் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியும் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
