அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ட்ரம்ப் என்ற பைத்தியம் ஈரான் தொடர்பில் அறிவித்திருந்த அறிவிப்பால் முழு உலக நாடுகளும் அச்சமடைந்திருந்த நிலையில் உலக மக்களின் பிராத்தனை காரணமாக தற்போது ஈரானின் 10 நிபந்தனைகளை ட்ரப்பும் அவரது அடிவருடிகளும் ஏற்றுக்கொண்டு தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன. ஈரானுக்கு பக்கபலமாக இருந்த ரஷ்யா, சீனா போன்ற முதுகெலும்புள்ள நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் அதேபோன்று ஸ்பைன் போன்ற நாட்டு தலைவர்கள் தைரியமாக முடிவெடுத்ததன் காரணமாக நேட்டோ நாடுகள் ட்ரம்புக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு முடிவெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது.
எனவே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் இடம்பெற இருக்கிறது. அந்த பேச்சுவாரத்தை வெற்றிபெற வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அட்டகாசம் பலஸ்தீன் மக்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் கண்டோம். இஸ்ரேல் பலஸ்தீன் மக்கள் மீது மேற்கொண்ட அநியாயங்கள் சொல்ல முடியாதவை. என்றாலும் தற்போது இந்த யுத்தத்தில் இஸ்ரேல் பாரிய அழிவை சந்தித்திருக்கிறது இந்த பாதிப்பில் இருந்து இஸரேல் மீள எழுவதற்கு இன்னும் 10 வருடங்களாவது செல்லும் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் யுத்த நிறுத்தத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கை இஸ்ரேலுக்கு படுதோல்வி என இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் தோல்வியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெதன்யாகுவின் தேவைக்கே ட்ரம்ப் இந்த யுத்தத்தை ஆரம்பித்தார். இந்த யுத்தம் நான் எடுத்த தீர்மானம் அல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எடுத்த தீர்மானம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தீர்மானம் எடுக்க தெரியாத ஒரு தலைவரையே அமெரிக்க மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்திருக்கிறார்கள். ஈரானின் முக்கியமான தலங்களை தாக்குவதாக ட்ரம்ப் அறிவித்தபோது ஈரான் மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வதற்கும் அச்சப்படாமல் தங்களின் நாட்டை பாதுகாக்க வீதிக்கு வந்தார்கள். இதுதான் இஸ்லாமியர்களின் பண்பாகும்.
எனவே அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும். அதேபோன்று அரபு நாடுகள் ஒற்றுமையாக செயற்பட ஆரம்பித்தால் இஸ்ரேலை பணியச்செய்து பலஸ்தீன் மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க முடியுமாகும் என்றார்.
![]()
