இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது
லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.22, லங்கா சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.24, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.25 மற்றும் ஒரு லீட்டரின் மண்ணெண்ணெய் ரூ.13 என அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இன்று (9) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
.அதன்படி, லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை ரூ.303, லங்கா சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை ரூ.353, ஒக்டேன் 92 பெட்ரோலின் புதிய விலை ரூ.317, ஒக்டேன் 95 பெட்ரோலின் புதிய விலை ரூ.365 மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை ரூ.195 என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
![]()
